உக்ரைன் போர் நிலவரம் குறித்து நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டால்டன் பெர்க்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இந்தப் போரால் இதர நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு நீடிக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாட்ரிட்டில் இம்மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நேட்டோ மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நேட்டோ அமைப்பில் இணைய பின்லாந்தும் ஸ்வீடனும் விண்ணப்பித்துள்ளதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்