ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரியில், திடீரென மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
அம்மாவட்டத்தில் உள்ள பெந்துரித்தி மலைப்பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த கல்குவாரியில் ராட்சத இயந்திரங்களை கொண்டு கற்கள் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஒரு பகுதி சரிந்து விழுந்தது.
இதுகுறித்த காணொலி இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், விபத்து குறித்து வருவாய்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.