கஞ்சா போதையில் ஆந்திர இளைஞரை வெட்டிவிட்டு செல்போனை பறித்து சென்ற மூன்று பேர் கைது
Published : Jun 02, 2022 9:37 PM
கஞ்சா போதையில் ஆந்திர இளைஞரை வெட்டிவிட்டு செல்போனை பறித்து சென்ற மூன்று பேர் கைது
Jun 02, 2022 9:37 PM
சென்னையில் கஞ்சா போதையில் ஆந்திர இளைஞரை வெட்டிவிட்டு செல்போனை பறித்து சென்ற மூன்று பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கழிவறைக்கு சென்ற ஆந்திராவை சேர்ந்த பூபால அசோக் என்பவரிடம் மூன்று பேர் கொண்ட கும்பல் செல்போனை மிரட்டி கேட்டுள்ளது. அதனை தர பூபால அசோக் மறுத்த நிலையில், அவரது கை, காலில் வெட்டிவிட்டு செல்போனை பறித்துவிட்டு கும்பல் தப்பி ஓடியது.
படுகாயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த கும்பலை போலீசர் கைது செய்தனர்.