விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே தண்ணீர் பானையில் மாட்டிக் கொண்டு வெளியேவர முடியாமல் தவித்த சிறுவனை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பெரியசெவலை கிராமத்தில் யஸ்வந்த் என்ற 3 வயது சிறுவன், வீட்டில் விளையாடிய போது பானைக்குள்ளே இறங்கிய நிலையில், அதில் சிக்கிக் கொண்டான். கால் முட்டி பானைக்குள் மாட்டிக் கொண்டு சிறுவன் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்திற்கு வந்த அவர்கள், பெரிய இரும்பு வெட்டும் கத்திரிக்கோல் மூலம் பானையை வெட்டி சிறுவனை மீட்டனர்.