​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உணவுக்கழிவுகளை சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்

Published : Jun 02, 2022 7:51 PM

உணவுக்கழிவுகளை சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்

Jun 02, 2022 7:51 PM

உணவுக் கழிவுகளை கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகியோர் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

உலகின் முதன் முறையாக உணவுக் கழிவுகளிலிருந்து சிமென்ட் தயாரிக்கும் செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள், தங்களது சிமெண்ட்டின் வலிமை சாதாரண சிமெண்ட்டை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என கூறினர்.