தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி பிரச்சனை காரணமாக இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கூட்டத்தின் போது கட்சியை பலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், மாநில பொதுக் குழு உறுப்பினருமான முத்துவிஜயா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த மாநகராட்சி கவுன்சிலர் குறுக்கிட்டு பேசியதால் இருத்தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.