நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழரை விழுக்காடாக இருக்கும் என எஸ்பிஐ ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 147 இலட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், இதனால் 8 புள்ளி 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நிறுவனங்களின் வருவாயும் இலாபமும் அதிகரித்தது, வங்கிக் கடன் வழங்கல் அதிகரித்தது ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சி ஏழரை விழுக்காடாக இருக்கும் என எஸ்பிஐ ஆராய்ச்சிப் பிரிவு கணித்துள்ளது.