பல மாநிலங்களுக்காக அடுத்த ஐந்தாண்டுகளில் ஐம்பதாயிரம் மின்சாரப் பேருந்துகளை வாங்க டெண்டர் கோர மத்திய அரசு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பொதுத்துறையைச் சேர்ந்த கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மகுவா ஆச்சார்யா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
பேரளவில் டெண்டர் கோருவதால் குறைந்த விலையில் பேருந்துகளை வாங்க முடியும் என்றும், டீசல் பேருந்துகளால் காற்று மாசடைவதைத் தடுக்க இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்துக்கு நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.