கொல்கத்தாவில் உயிரிழந்த பாடகர் கே.கேயின் உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. கே.கே.வின் உடற்கூராய்வு அறிக்கையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீண்ட காலமாகவே கே.கேவுக்கு நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாக கூறப்படுகிறது. கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் அவர் கடைசியாக பாடிய வீடியோக்களும் அவர் ஓட்டலுக்கு திரும்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை உருக வைத்துள்ளன.
கே.கே.யின் உடலுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்