இளையராஜாவின் 80 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. அன்னக்கிளியில் தொடங்கி காலம் கடந்து நிலைத்த இசைப்பயணம்..!
Published : Jun 02, 2022 6:33 AM
இளையராஜாவின் 80 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. அன்னக்கிளியில் தொடங்கி காலம் கடந்து நிலைத்த இசைப்பயணம்..!
Jun 02, 2022 6:33 AM
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று 80வது பிறந்தநாள். 40 ஆண்டுகளாக திரையுலகில் இனிமையான பாடல்களை வழங்கிய இசைஞானி குறித்த ஒரு செய்தித் தொகுப்பு..
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் வந்த போது மச்சானைப் பார்த்தீங்களா பாட்டு பட்டி தொட்டி எல்லாம் ஒலித்து ஒரு சிறந்த இசையமைப்பாளரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது.
மச்சானைப் பார்த்தீங்களா
1943 ஆம் ஆண்டு இதே நாளில் மதுரை மாவட்டம் பண்ணை புரத்தில் பிறந்த இளையராஜா 1400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை கடந்த 40 ஆண்டுகளாக இசைத்து வருகிறார்.
breathe song பூந்தளிராட .....பன்னீர் புஷ்பங்கள்
இயக்குனர்கள் ஸ்ரீதர், கே.பாலசந்தர் பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம், மகேந்திரன் பாலு மகேந்திரா இயக்கிய படங்களில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் இசையால் வார்த்த காவியங்களாக நிலைத்து நிற்கின்றன
கிண்ணத்தில் தேன் வடித்து இளமை ஊஞ்சலாடுகிறது.
நானொரு சிந்து - சிந்து பைரவி
பூங்கதவே தாழ் திறவாய் ....நிழல்கள்
சின்ன சின்ன வண்ணக்குயில் - மௌன ராகம்
அழகிய கண்ணே ....உதிரிப்பூக்கள்
கண்ணே கலை மானே - மூன்றாம் பிறை
சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் போன்ற நடிகர்களின் பல படங்களுக்கு இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் மெருகூட்டின.
பூப்போல உன் புன்னகையில் - கவரிமான்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள - தளபதி
உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன் அபூர்வ சகோதரர்கள்
சின்னமணிக் குயிலே - அம்மன் கோவில் வாசலிலே
தேவதை இளம் தேவி ....
ராமராஜன், மோகன் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இளையராஜாவின் பாடல்கள் தனி அந்தஸ்தையும், திரைப்பட வசூலையும் பெற்றுத் தந்தன.
செண்பகமே செண்பகமே
சங்கீத மேகம்
விஜய், பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கும் இளையராஜாவின் இசை இனிய தாலாட்டை உருவாக்கியது.
breathe என்னைத் தாலாட்ட வருவாளா
உன் குத்தமா என் குத்தமா
திரையுலகிற்கு இளையராஜா அளித்துள்ள இனிய பாடல்கள், இன்னும் வரப்போகும் பல தலைமுறையினருக்கு பொக்கிஷமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை..