சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மகனின் ஆசையை நிவர்த்தி செய்வதற்காக மெக்கானிக் ஒருவர் கே.டி.எம் பைக் போன்ற சிறிய ரக பைக்கை உருவாக்கியுள்ளார்.
பைக் மெக்கானிக்கான தங்கராஜ் என்பவரது மகன் மோகித், சாலையில் சென்ற விலையுயர்ந்த கே.டி.எம் பைக்கை பார்த்து அதே போன்ற வாகனம் வேண்டுமென தந்தையிடம் அடம்பிடித்துள்ளார்.
இதையடுத்து ஒரு வருடமாக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தங்கராஜ் 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சிறிய ரக பைக்கை உருவாக்கி மகனுக்கு பரிசளித்தார். சிறுவன் மோகித் தனது தந்தையை பின்னால் அமரவைத்து பைக்கை ஓட்டி மகிழ்ந்தார்.
அந்த பைக்கை வீட்டின் காம்பவுண்ட் உள்ளே மட்டுமே ஓட்ட அனுமதிப்பதாகவும் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் தங்கராஜ் தெரிவித்தார்.