யங் இந்தியா நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட முறைகேடு மற்றும் மோசடி வழக்கில், வரும் ஜூன் 8-ம் தேதி நேரில் ஆஜராக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சோனியா காந்தி அமலாக்கத்துறை முன் ஆஜராக உள்ளது உறுதியான நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளதால் அவகாசம் கோரப்படும் என தெரிகிறது.
சம்மன் அனுப்பியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, நாங்கள் போராடுவோம், வெற்றி பெறுவோம். ஆனால் பயப்பட மாட்டோம் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.