மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 885 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 44 விழுக்காடு அதிகமாகும். மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களும் தொடர்ந்து ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி வருவாய் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபின் வரி வருவாயில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்னும் இலக்கைத் தாண்டியிருப்பது இது நான்காவது முறையாகும்.