பாடகர் கேகேயின் மரணம் இயற்கைக்கு மாறானது எனக் கொல்கத்தா நியூ மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கேகேயின் மனைவி ஜோதி கிருஷ்ணா, மகன் நகுல், மகள் தாமரை ஆகியோர் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தனர். உடல் அடையாளங்களைக் காட்டி ஒப்புதல் பெற்றதும் அரசு மருத்துவமனையில் கேகேயின் உடல் கூறாய்வு செய்யப்பட்டுக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.
கேகேயின் உடல் எடுத்துச் செல்லப்படும்போது கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனிடையே கேகே தங்கியிருந்த ஓபராய் கிராண்ட் விடுதி அறையைப் பார்வையிட்ட கொல்கத்தா காவல் இணை ஆணையர், விடுதி நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார்.