​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பித்தளை காசுகளை தங்க காசுகள் என்று கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி

Published : Jun 01, 2022 6:37 AM

பித்தளை காசுகளை தங்க காசுகள் என்று கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி

Jun 01, 2022 6:37 AM

சென்னை சவுகார்பேட்டையில் பித்தளை காசுகளை தங்க காசுகள் என்று கூறி நூதன முறையில் 30 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தங்கசாலையைச் சேர்ந்த ஜித்மல் மற்றும் மகன் சுரேஷ் ஆகியோர் ஏற்றுமதி - இறக்குமதி தொழில் செய்து வருகின்றனர் . கடந்த 7  நாட்களுக்கு முன்பு ஜித்மலுக்கு பழக்கமான ஒருவர் அவரிடம் ஒரு கிராம் எடையுள்ள 4 தங்கக் காசுகளைக் கொடுத்து பத்தாயிரம் ரூபாய் வாங்கி சென்றார்.

தொடர்ந்து அதே நபர் 3 நாட்களுக்கு முன்பு ஜித்மலின் மகனான சுரேஷிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு 4கிலோ தங்க காசுகளை கொடுத்துள்ளார். பின்னர் சுரேஷ் வீட்டுக்கு சென்று அதனை பரிசோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை காசுகள் என்பது தெரிய வந்தது.