ஈராக் நாட்டில், மூக்கில் இருந்து ரத்தம் வடியச் செய்யும் புதுவித காய்ச்சலுக்கு பலர் உயிரிழப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் கிராமப்புறங்களில் வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சல், கிரிமியன் - காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்றழைக்கப்படுகிறது.
சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்ட காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருவதாகவும், பாதிக்கப்பட்ட 111 பேரில் 19 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூக்கின் வழியாக அதிகளவு ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும், இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் ஐந்தில் இருவர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
ஒரு விதமான உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படும் போது, அதன் மூலம் மனிதர்களுக்கு இந்த காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. இதுவரையில் இந்த காய்ச்சலுக்கு தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.