தொழிலாளர் பற்றாக்குறையை போக்க 100 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட ரோபோ தயாரிப்பு!
Published : May 31, 2022 6:17 PM
தொழிலாளர் பற்றாக்குறையை போக்க 100 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட ரோபோ தயாரிப்பு!
May 31, 2022 6:17 PM
ஜப்பானில் அதிக பாரங்களை ஏற்றும் வகையில் ஆடு வடிவிலான ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை சேர்ந்த Kawasaki நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரோபோ தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
கரடு முரடான இடங்களில் நான்கு கால்களைக் கொண்டும், மென்மையான தரைகளில் அதில் பொருத்தப்பட்டுள்ள சக்கரங்களைக் கொண்டும் நகரும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
100 கிலோ வரை பாரம் ஏற்றும் வகையில் உருகாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, அடுத்த ஆண்டு முதல் வணிக பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.