தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்ட பின்பு இன்று முதன் முறையாக, இரண்டாயிரம் பேர் ஓய்வு பெறுவதால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கான ஒய்வு பெறும் வயது இரண்டு ஆண்டுகளுக்கு முன் 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.
சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது ஓய்வு பெறுபவர்களால் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.