சென்னையில் இயக்கப்படும் 2,000 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர், கடந்த மூன்று மாதங்களில் அதிக நாட்கள் விடுப்பு எடுத்த பணியாளர்களுக்கு அரசு பேருந்து சேவையின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து நிதித்துறையுடன் ஆலோசித்த பின் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.