குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து சென்னை, கோவை உட்பட சர்வதேச விமான நிலையங்கள் வருபவர்களை கண்காணிக்க தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வரும் நிலையில், மாவட்ட சுகாதார அதிகாரிகள் அனைவரும் தங்களது பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு உடல்வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் 21 நாட்கள் வரை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.