கொரோனா தொற்றால் முடக்கப்பட்டுள்ள சீனாவின் ஷாங்காய் நகரம் நாளை முதல் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் நகரத்தில் நாளை முதல் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் முழுமையாக தொடங்கும் என துணை மேயர் சோங் மிங் தெரிவித்துள்ளார்.
அதிக ஆபத்துள்ள பகுதிகள் மற்றும் தொற்று கட்டுப்பாடுகள் உள்ள இடங்களை தவிர மற்ற பகுதிகளில் வாடகை கார் சேவைகள் மற்றும் ஆன்லைன் வர்த்தகங்கள் செயல்படும் என்றும், ஷாங்காய் நகரில் உள்நாட்டு விமான சேவைகளும் படிப்படியாக தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.