மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் கர்நாடகாவில் இருந்து 2-வது முறையாக போட்டியிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பலரும் அப்போது உடனிருந்தனர்.
தமிழகம், கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் இருந்து 57 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதையடுத்து அந்த இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.