உச்ச வரம்பையும் தாண்டி 18 மடங்கு யூரேனியத்தை ஈரான் கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை.!
Published : May 31, 2022 10:22 AM
உச்ச வரம்பையும் தாண்டி 18 மடங்கு யூரேனியத்தை ஈரான் கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை.!
May 31, 2022 10:22 AM
2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் படி அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பையும் தாண்டி 18 மடங்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்துள்ளது.
2015ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போடப்பட்ட அணுசக்தி பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் படி ஈரான் 300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் அதற்கு மாறாக 3 ஆயிரத்து 809 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தற்போது கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.