​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு கல்லீரல் தொடர்புடைய ஹெபாடிடிஸ் நோய்..!

Published : May 31, 2022 8:09 AM



ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு கல்லீரல் தொடர்புடைய ஹெபாடிடிஸ் நோய்..!

May 31, 2022 8:09 AM

ஆர்கானிக் ஸ்ட்ராபரி பழங்களில் இருந்து பரவும் கல்லீரல் தொடர்புடைய ஹெபாடிடிஸ் நோய் குறித்து அமெரிக்கா மற்றும் கனடா  உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம் விசாரித்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் கனடா நகரங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்டராபரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு ஹெபாடிடிஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரு நாடுகளிலும் 15க்கும் மேற்பட்டோர் கல்லீரல் செயலிழக்க நோயால் அவதிப்படுவதாகவும் காலாவதியான ஸ்டராபரி பழங்களை மக்கள் தூக்கி எறியுமாறும் உணவு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.