​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆர்யன் கான் வழக்கில் சர்ச்சையில் சிக்கிய ஷமீர் வான்கடே சென்னைக்கு பணி மாற்றம்..!

Published : May 31, 2022 8:00 AM



ஆர்யன் கான் வழக்கில் சர்ச்சையில் சிக்கிய ஷமீர் வான்கடே சென்னைக்கு பணி மாற்றம்..!

May 31, 2022 8:00 AM

போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை தவறாக கைது செய்த மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் மண்டல தலைவர் சமீர் வான்கடே சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க பேரம் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் சமீர் வான்கடே மீது விசாரணை நடத்த நிதி அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை வரி செலுத்துவோர் சேவைகளின் பொது இயக்குனநராக  உடனடியாக பணியில் சேர மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் உத்தரவிட்டது.