ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகள் பயன்படுத்தும் ராக்கெட்டுகளுக்கு சமமான நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்டுகள், மற்றும் அதற்கு தேவையான பேட்டரிகள், சாதாராண பீரங்கிகளை காட்டிலும் 8 மடங்கு நவீன மற்றும் பல ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் செலுத்தும் ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் கோரி உள்ளது.
நீண்ட தூர ராக்கெட்டுகளை வழங்குமாறு கீவ் கோரியுள்ள போதும் வழங்கப் போவதில்லை என அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.