உக்ரைனில் நடைபெற்றுவரும் போரால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான உயிர்காக்கும் சிகிச்சை உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கிவந்த நன்கொடையை பல்வேறு தரப்பினரும் தற்போது உக்ரைனில் இருந்து வெளியேறிய 6 மில்லியன் அகதிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
எனவே உக்ரைன் போர் மற்றும் தொற்றுநோய்கள் காரணமாக அடுத்த 6 மாதங்களில் உணவுகளின் விலை 16 சதவீதம் உயர்வதுடன், 6 லட்சம் குழந்தைகள் சிகிச்சையை இழக்க நேரிடும் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.