கியூபாவில் உள்ள புகையிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
பினார் டெல் ரியோவில் அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான புகையிலை சேகரிப்பு கிடங்கு மற்றும் உற்பத்தி ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அது மளமளவென பரவியது.
அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், விண்ணை முட்டும் அளவுக்கு கரும் நச்சுபுகை வெளியேறியது. சுமார் 26 டன் அளவிலான விற்பனை தயாராக இருந்த புகையிலை பொருட்கள் தீக்கிரையாகியது.