உகண்டாவில் குறைந்த விலையிலான காற்று தர மானிட்டர்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் காணப்படும் தீவிர வெப்பம், மாசு போன்ற எந்த சூழ்நிலைகளிலும் இயங்கும் படி இவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் அதிக இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு தொடர்பான நோய்களால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதர அமைப்பு தெரிவித்துள்ளது.