பெங்களூரு விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு இண்டிகோ விமானங்களை பறக்க அனுமதி அளித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரை 3 மாதம் சஸ்பெண்ட் செய்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.
100 அடி தூர இடைவெளியில் இரு விமானங்களும் நேருக்கு நேர் மோத இருந்த நிலையில் ரேடார் கண்ட்ரோலர் மூலம் விமானங்கள் கட்டுப்படுத்தப்பட்டது. பணியில் அலட்சியம் காட்டியதாக நிலையத்தின் வடக்கு கோபுர கட்டுப்பாட்டாளரின் உரிமத்தை 3 மாதம் இடைநீக்கம் செய்து டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டது.