பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால், ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின.
பெர்னாம்பகோ மற்றும் அலகோவாஸ் மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.