சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
திருட்டு வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி துன்புறுத்தியதாக காவல்துறையினருக்கு எதிராக தனலட்சுமி என்பவர் புகார் அளித்தார்.
இதன் விசாரணையில், மனித உரிமை மீறல் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தனலட்சுமிக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆணைய உறுப்பினர், சமூகத்தில் இருந்து தற்காத்து கொள்ள இயலாத மக்களிடம் போலீசார் அதிகாரத்தை காட்டக் கூடாது என்றார்.