கதவுகள் பூட்டிய நிலையில் மசாஜ் மையங்கள் செயல்பட சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
ஸ்பா, மசாஜ் மையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட 27 வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், வாடிக்கையாளர் விவரங்களை பதிவு செய்யவும், ஒருவருக்கு சேவை வழங்கிய பின் கைகள் மற்றும் கருவிகளை முறையாக சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்தவும், பாலியல் தொடர்பான சேவைகளை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.