தேனியில் முன் விரோதம் காரணமாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலகத்தில், திட்ட அலுவலரை இளநிலை உதவியாளர் அரிவாளால் தாக்கினார்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் செயல்படும் அந்த அலுவலகத்தில் ராஜேஸ்வரி என்பவர் திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அதே அலுவலகத்தில் பணியாற்றிய உமா சங்கர் மீது பல்வேறு புகார்களை சென்னை தலைமை அலுவலரிடம் ராஜேஸ்வரி தெரிவித்ததால், அவர் பணிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த உமா சங்கர், ராஜேஸ்வரியை அலுவலகத்தில் வைத்து தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உமா சங்கர் கைது செய்யப்பட்டார்.