ரஷ்யாவில், 40 வயதிற்கு மேற்பட்டோரையும் ராணுவத்தில் சேர அனுமதிக்கும் அரசாணைக்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய வீரர்கள் 30,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களே ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உச்சக்கட்ட வயது வரம்பு அகற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் மருத்துவர்கள், பொறியாளர்கள், தகவல் தொடர்பு நிபுணர்கள் என ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்களை ராணுவத்தில் சேர்க்க ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது.