திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக திருச்சி சென்ற அவர், திடீரென மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, அதிகாரிகளிடம் மாநகராட்சியின் செயல்பாடு, பட்ஜெட், வருகை பதிவேடு, மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
மக்களுக்கான சேவைகளை தாமதமின்றி விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக தீர்வு காண்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.