வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் இன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மேற்கு மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 1, 2, 3 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகப் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்றும் நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.