பெல்ஜியம் நாட்டின் டென்டர் மோன்டே டவுணில் நடனமாடும் குதிரையைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.
வரலாற்றுப் பேரணியில் இந்த நடனமாடும் குதிரை மீது நான்கு குழந்தைகள் சவாரி செய்கின்றனர். பாயார்ட் ஸ்டீட் என்று அழைக்கப்படும் மரக்கால் குதிரை 12 பேரால் இயக்கப்படுகிறது.
கடந்த 12 ஆண்டுகளாக இது பொதுமக்கள் பார்வைக்குத் தட்டுப்படவில்லை. அணிவகுப்பு பேண்டு வாத்தியங்கள் முழங்க நடனமாடும் குதிரையைக் காண 86 ஆயிரம் பேர் திரண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராட்சத உருவங்களுடன் பல்வேறு மாறுவேடத் தோற்றங்களில் சுமார் 2 ஆயிரம் நடனக்கலைஞர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்கின்றனர்.