ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் முதல்முறையாக தலைநகர் கீவ்வை விட்டு வெளியேறி கார்கீவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். ரஷ்யப் படைகளின் தாக்குதல்களில் சிக்கி சேதமடைந்த கட்டடங்கள், உருக்குலைந்து கிடங்கும் வாகனங்களை ஜெலன்ஸ்கி பார்வையிட்டார்.
சிதிலமடைந்து காணப்படும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களை மறுசீரமைக்கும் பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணித்தினிடையே ராணுவ வீரர்களுக்கு விருது மற்றும் பரிசுகளை ஜெலன்ஸ்கி வழங்கிய வீடியோவை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
போரில் வடகிழக்கு நகரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டியதாக அப்பகுதி பாதுகாப்பு தலைவரை பணி நீக்கம் செய்து ஜெலன்ஸ்கி உத்தரவிட்டதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.