பீகாரில் உள்ள மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜமுய் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 600 கிலோ எடையுள்ள தங்க தாது கிடைக்கும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள பீகார் அரசு, GSI மற்றும் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் 222.885 மில்லியன் டன் தங்க உலோகம் உள்ளதாவும், இது நாட்டின் மொத்த தங்க இருப்பில் 44% ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.