வடகிழக்கு மாநிலங்களில், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், வடகிழக்கு பிராந்தியத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கி வருவதாக குறிப்பிட்டார்.
தற்போது வடகிழக்கு பகுதிகளில், 74 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 ரயில்வே துறை திட்டங்களும், 58 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.