கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்து அதிகரிப்பு... விலை குறைந்தும் மாம்பழம் வாங்க ஆர்வம் காட்டாத மக்கள்.!
Published : May 29, 2022 5:24 PM
கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்து அதிகரிப்பு... விலை குறைந்தும் மாம்பழம் வாங்க ஆர்வம் காட்டாத மக்கள்.!
May 29, 2022 5:24 PM
சென்னை கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ள போதிலும், விற்பனை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தைக்கு ஒரு நாளைக்கு 25 லாரிகள் மாம்பழ லோடு வரும் நிலையில், அனைத்து ரக மாம்பழங்களும் கிலோவுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் கல் மற்றும் ரசாயன பொருட்கள் மூலம் மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதாக அச்சப்படும் மக்கள், மாம்பழங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.