சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எப்.சி வங்கி கிளையில் இருந்து வாடிக்கையாளர்களின் 100 வங்கி கணக்குகளுக்கு தலா 13 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
100 வங்கி கணக்குகளையும் முடக்கிய வங்கி அதிகாரிகள், தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
புதிய சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததே குழப்பத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் செலவு பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும்போது அது தவறுதலாக வரவு பக்கத்தில் சென்றதாகவும், சென்னையில் உள்ள மேலும் சில எச்.டி.எப்.சி வங்கி கிளைகளிலும் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அது விரைவில் சரி செய்யப்படும் என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.