பயங்கரவாதக் குழுக்களிடம் கேரள அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தின் ஆலப்புழையில் பாப்புலர் பிரன்ட் கூட்டத்தில் இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இத்தகைய நிகழ்வுகள் அரசின் ஆதரவுடன் திரும்பத் திரும்ப நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.
முழக்கம் எழுப்பியவரைக் கைது செய்திருப்பதை வரவேற்ற அவர், இத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.