இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தியும் அரசியலமைப்பை மாற்றக்கோரியும் தலைநகர் கொழும்புவில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள நிரந்தர போராட்ட தளத்திற்கு வந்த அவர்கள், தற்போதைய நிலைக்கு சுதந்தரமான வெளிப்படையான அரசியலமைப்பு மற்றும் ஆட்சி முறை இல்லாததே காரணம் என்று குற்றம்சாட்டினர்.
மக்கள் போராட்டத்தை எந்த வகையிலாயினும் ஆதரிப்பதே குடிமகனாக தங்களது கடமையும், பொறுப்பும் என்றும் பேரணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.