உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள உருக்கு ஆலையில் சிறைப்பிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 உக்ரைன் வீரர்களை விடுதலை செய்யுமாறு ரஷ்ய அதிபர் புதினை பிரான்சும் ஜெர்மனியும் வலியுறுத்தியுள்ளன.
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் மற்றும் ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோர் அதிபர் புதினைத் தொடர்பு கொண்டு ரஷ்யப் படைகளால் சிறைவைக்கப்பட்டிருக்கும் உக்ரைன் வீரர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது