தேசிய கல்விக் கொள்கை 21 வது நாற்றாண்டின் அறிவுக் கருவூலமாக விளங்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
புனேயில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர், இத்திட்டம் தனிநபரின் திறமைகளை வளர்ப்பதுடன் அனைத்துத் தரப்பினரும் கல்வி கற்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.
இந்தியா அறிவுலகின் மையமாக விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், உலகப் பொருளாதாரத்துக்கு இந்தியாவின் பங்களிப்பை சுட்டிக் காட்டினார்.