​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் கலைஞர் சிலை திறப்பு.. வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.!

Published : May 29, 2022 6:12 AM



சென்னையில் கலைஞர் சிலை திறப்பு.. வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.!

May 29, 2022 6:12 AM

நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களின் வளர்ச்சியால்தான் நாடு வளரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை பொதுப்பணித்துறை சார்பில் நிறுவப்பட்டுள்ளது. 14 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வெண்கல சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு திறந்து வைத்தார்.

இதனை அடுத்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, கலைஞர் கருணாநிதி மிகச்சிறந்த நிர்வாகி என்றும் நிலையான நல்லரசை தந்தவர் என்றும் பாராட்டுக்களை தெரிவித்தார். மாநிலங்களின் வளர்ச்சியால் தான் நாடு வளரும் என்றும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மற்ற மொழிகளை கற்பதில் தவறு இல்லை என்றும் நமது தாய் மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.