தெலுங்கானா மாநிலம் நம்பள்ளி அருகே தேரில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்தனர். கேதேபள்ளி என்ற ஊரில் இருக்கும் கோவிலுக்காக இரும்புக் கம்பியால் ஆன தேர் வாங்கப்பட்டது. அந்த தேர் மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மழை பெய்ததால் தேரை கோவிலில் உள்ள கொட்டகைக்கு மாற்ற முடிவு செய்து அப்பகுதி மக்கள் தேரை இழுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, தேரின் மேல் பகுதியில் இருந்த இரும்புக் கம்பி உயரழுத்த மின்கம்பியில் உரசியதில், மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.