​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைனில் மேலும் ஒரு நகரத்தை கைப்பற்றியது ரஷ்யா

Published : May 28, 2022 7:57 PM

உக்ரைனில் மேலும் ஒரு நகரத்தை கைப்பற்றியது ரஷ்யா

May 28, 2022 7:57 PM

கிழக்கு உக்ரைனிய நகரமான லைமனை முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டொனெட்ஸ்க் குடியரசின் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத குழுக்கள், சீவிரோடோனெட்ஸ்கிற்கு மேற்கே உள்ள ரயில்வே மைய நகரமான லைமனை கைப்பற்றியதாக கூறியிருந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனை ஒப்புக் கொண்ட உக்ரைன் அதிகாரிகள், லைமனுக்கு அருகில் இருக்கும் ஸ்லோவியன்ஸ்க் நகரை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறுவதை தடுத்து வருவதாக கூறியுள்ளனர்.